டெல்லி:

பிரதமர் மோடி கல்வி விபரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய டெல்லி பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

அளிக்க 1978ம் ஆண்டு பிஏ தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்கள் அடங்கிய பதிவேடுகளை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என டெல்லி பல்கலைக்கழகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் கடந்த 7ம் தேதி உத்தரவிட்டது. இந்த ஆண்டில் தான் பிரதமர் மோடியும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

3ம் நபரின் விபரங்களை அளிக்க முடியாது என்று பல்கலைக்கழகத்தின் தகவல் வழங்கும் அலுவலரின் அறிவிப்பை ஆணையம் தள்ளுபடி செய்தது. மேலும், அந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களின் பெயர், தந்தை பெயர், முகவரி, வரிசை எண், மார்க் விபரம், சான்றதழ் நகல் ஆகியவற்றை பதிவாளரிடம் இருந்து பெற்று இலவசமாக வழங்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டது.

நீரஜ் சர்மா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இது போல் ஆணையம் உத்தரவிட்டது.
மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களை அளிக்க முடியாது என்று பல்கலைகலை நிர்வாகம் மறுப்பு தெரிவித்தன் மேல் முறையீட்டில் ஆணையம் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி பல்கலைக்கழகம் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு செய்துள்ளது.
தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்கு அடுத்தக்கட்ட விசாரணையை ஏப்ரல் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து சஞ்சீத் சஜ்தேவா